Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 22, 2020

SCA உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத பொறியியல் இடங்களுக்கு விருப்பமுள்ள SC மாணவர்கள் 24.11.2020 முதல் நடைபெறும் இணையதள கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் - TNEA செயலாளர்...

தமிழ்நாடு அரசு ஆணை ( Ms ) எண் .61 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ( TD2 ) துறை நாள் 29.05.2009 யின் படி அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களை நிரப்ப , தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2020 - ல் ஒதுக்கீடு ஆணை பெற்றுள்ள ஆதிதிராவிடர் ( SC ) மாணவர்களுக்கான இணையதளம் வாயிலான கலந்தாய்வு விண்ணப்ப விளம்பர அறிவிக்கை 22.11.2020 அன்று வெளியிடப்பட உள்ளது . 

22.11.2020 அன்று வெளியிடப்பட உள்ள அறிவிக்கையினைத் தொடர்ந்து , தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2020 - க்கு விண்ணப்பித்த தமிழ்நாட்டைச் சார்ந்த ( SC ) விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு 24.11.2020 முதல் 27.11.2020 இணையதள வாயிலாக நடைபெறவுள்ளது. 

ஏற்கெனவே ஒதுக்கீட்டு ஆணை பெற்ற விருப்பமுடைய ( SC ) விண்ணப்பதாரர்கள் SCA- ல் நிரப்பப்படாமல் உள்ள காலி சேர்க்கை இடங்களை பெற இணையதள கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் . 

SCA - பிரிவில் காலியாக உள்ள இடங்களை அறியவும் மற்ற விபரங்களுக்கும் கீழ்க்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும். https://www.tneaonline.org or https://www.tndte.gov.in மேலும் விவரங்களை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : 044-2235 1014 | 1015 1 0520 / 0523 | 0527

No comments:

Post a Comment