Search This Blog

Friday, December 11, 2020

மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த +1, +2 மாணவர்கள் கவனத்துக்கு..

0 comments
கடந்த செப்டம்பர் அல்லது அக்டோபர் 2020ல், மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு (பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2) துணை பொதுத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நடைபெற்ற செப்டம்பர் / அக்டோபர் 2020, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணை பொதுத் தேர்வு எழுதி, மறுகூட்டல் (ரீ-டோட்டல்) மற்றும் மறுமதிப்பீடு (ரீவேலுயூஷன்) கோரி விண்ணப்பித்தவர்கள், https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 15.12.2020 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மதிப்பெண் பட்டியலில் மாற்றம் இல்லாத தேர்வெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment