JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
"அடுத்த கல்வி ஆண்டில் புதிய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும்" மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தகவல்
அடுத்த கல்வியாண்டில் புதியதாக உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என, மத்திய உயர்கல்வித் துறை செயலாளார் அமித் கரே தெரிவித்துள்ளார்.
தன்னார்வ தொண்டு அமைப்பின் கருத்தரங்கில் காணொலி வாயிலாக அவர் பங்கேற்றார். அப்போது பேசிய அமித் கரே, பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படவுள்ளது என்றார்.
மேலும், அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், சேர்க்கை பெற பொது நுழைவுத் தேர்வு போன்ற மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment