JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் டான்செட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜனவரி 19) தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 'டான்செட்' எனப்படும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.
இத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் 20-ம் தேதியும், எம்இ, எம்ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 21-ம் தேதியும் தேர்வுகள் நடைபெற உள்ளன. எம்சிஏ படிப்புக்குக் காலை 10 முதல் 12 மணி வரையும் எம்பிஏ படிப்புக்கு மதியம் 2.30 முதல் 4.30 மணி வரையும் தேர்வு நடைபெற உள்ளது
இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜனவரி 19) தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 12ஆம் தேதி வரை www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் இறுதி நிலையை பிப்ரவரி 17ஆம் தேதி அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை மார்ச் 5-ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தேர்வுக் கட்டணம் ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://tancet.annauniv.edu/tancet/
17 one day only correction date sir
ReplyDelete