Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 21, 2021

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு எதிர்ப்பு.!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு கடந்த மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி, அதற்கு ஆளுநர் அளித்தார்.

இதனையடுத்து தமிழக அரசும் மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த அரசனையால் 400 க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு சலுகை வழங்குவதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது சம்மந்தமான ஒரு வழக்கில், "உள் ஒதுக்கீடு வழங்கினால் அது நீட் தேர்வின் தேர்வின் தகுதியை நீர்த்து போகச்செய்யும்" என்று மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வாதம் செய்துள்ளது.

No comments:

Post a Comment