JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
துறைத்தேர்வுகள் எழுதும் ஆசிரியர்கள், மாற்று பணியில் சென்று தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கவேணடும் எனமுதுகலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து,நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராமு, பள்ளிகல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்:
அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற, துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது என்பது கட்டாயம். நடப்பாண்டிற்கான துறைத்தேர்வுகள் வரும் 21ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளில், துறைத்தேர்வுகள் பெரும்பாலும் விடுமுறை நாட்களிலேயே நடத்தப்பட்டது.
நடப்பாண்டில் பள்ளி வேலை நாட்களில் தேர்வுகள் நடைபெறுவதால், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, தேர்வுகளை எழுத செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வு எழுத உள்ள ஆசிரியர்கள் அன்றைய தினம் தற்செயல் விடுப்பு எடுக்காமல் மாற்றுப்பணியில் செல்லலாம் என்ற அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு ராமு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment