Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 7, 2021

ஓட்டளிக்க தகுதியான 11 ஆவணங்கள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

'வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 11 ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை காண்பித்து, ஓட்டு போடலாம்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

அசாம், கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு, சட்டசபை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.ஓட்டளிக்க வரும்போது, தங்கள் அடையாளத்தை நிரூபிக்க, வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வாக்காளர் அட்டை இல்லாதவர்கள், ஓட்டு அளிக்க முடியாத நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக, 11 ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

ஆதார்

தேசிய ஊரக வேலை திட்ட அடையாள அட்டை

வங்கி, தபால் அலுவலக கணக்கு புத்தகம்

தொழிலாளர் துறை வழங்கியுள்ள, சுகாதார காப்பீட்டு திட்டம்

ஓட்டுனர் உரிமம்

பான் கார்டு

தேசிய மக்கள் தொகை பதிவேடு அட்டை

இந்திய பாஸ்போர்ட்

புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

மத்திய, மாநில அரசுகள் வினியோகித்துள்ள அடையாள அட்டை

எம்.பி., - எம்.எல்.ஏ., அடையாள அட்டை இந்த 11 அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம்.

இவ்விபரங்களை, வாக்காளர்கள் அறிந்து கொள்ள, தேர்தல் நடத்தும் அலுவலர்கள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment