Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 16, 2021

+2 பொதுத் தேர்வு - மே - 2021 - விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத் தாட்களை (Top Sheets) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

நடைபெறவிருக்கும் மே 2021 , மேல்நிலைப் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்குரிய முகப்புத் தாட்கள் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது. மேலும் , முகப்புத்தாட்களை சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வழங்கி , முதன்மை விடைத்தாட்களுடன் முகப்புத்தாட்களை இணைத்து தைக்கும் பணியினை மேற்கொள்ளுமாறு தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்துமாறு அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களிடம் தெரிவிக்கப்பட்டது . 

தேர்வு மையத் தலைமை ஆசிரியர்கள் தங்கள் மையத்தில் தேர்வெழுதும் அனைத்துத் தேர்வர்களுக்கும் தேர்வெழுதும் அனைத்து பாடங்களுக்கான முகப்புத் தாட்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முகப்புத்தாட்கள் கிடைக்கப் பெறாத / சேதமடைந்த ( Barcode - Reg.No. overlapped , bar code smudged ) முகப்புத்தாட்களை தேர்வு மையத்திற்கென வழங்கப்பட்டுள்ள User D / Password கொண்டு இணையதளம் மூலம் 16.04.2021 அன்று பிற்பகல் முதல் அந்தந்த தேர்வு மையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment