Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 29, 2021

தமிழகத்தில் மறு உத்தரவு வரை விடுமுறை..

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பெருபாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மே 1ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அடுத்த கல்வியாண்டுக்குள் பள்ளிகளை தயார் செய்ய மே மாத இறுதியில் ஆசிரியர்கள் பணிக்கு வர மறு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment