Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 26, 2021

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 'யூடியூப்'ல் பாடம்

பள்ளிக் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக, பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகம் தயாரிக்கப்பட்டது.தற்போது, இந்த இணைப்பு பாடப் பயிற்சி கட்டகம், இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அந்த இணைப்பு பாடப்பயிற்சி கட்டகத்தில் உள்ள கருத்துக்களை, மாணவர்களுக்கு புரியும் வகையில் காணொலியாகவும் தயாரிக்க திட்டமிடப்பட்டது. அதன்பேரில், உடுமலை அடுத்த திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு எட்டாம் வகுப்பு ஒதுக்கப்பட்டது.

எட்டாம் வகுப்பு இணைப்பு பாடப் பயிற்சி கட்டகத்தில் உள்ள அனைத்து பாடங்களுக்கான செயல்பாடுகளும் வீடியோ வடிவில் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பாடத்துக்கு ஐந்து வீதம், 25 காணொலிகள் தயாரிக்கப்பட்டு, சென்னைக்கு அனுப்பப்பட்டன. அவை, தற்போது கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

எனவே, எட்டாம் வகுப்பு மாணவர்கள், இணைப்பு பாடப்பயிற்சி கட்டக செயல்பாடுகளை தாங்களாகவே வீடுகளில் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் காணொலிகள் வாயிலாக கற்றுக் கொள்ள முடியும்.அதுமட்டுமின்றி ஒளிபரப்பப்பட்ட அனைத்து காணொலிகளும் உடனடியாக 'யூடியூப்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment