JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை ஐஐடி , அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் இணையவழித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கரோனா பரவலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்க முடியாத காரணத்தால், ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்தனியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு, முழு முடக்கம் போன்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு இணைய வழியாக பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மே 10-ஆம் தேதி நடக்கவிருந்த ஐஐடி சென்னை பருவத் தேர்வுகளும், மே 3-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி கரோனா பரவல் குறைந்த பின்னா் அறிவிக்கப்படும் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
மேலும் சென்னைப் பல்கலைக்கழகமும் தனது ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 17-ஆம் தேதி முதல் பருவத் தேர்வுகளை நடத்த சென்னைப் பல்கலைக்கழகம் திட்டமிட்டிருந்த நிலையில் அவை ரத்து செய்யப்பட்டு வேறொரு நாளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment