Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 28, 2021

மூக்கடைப்பை மூணு செகண்ட்லே வெடி வைத்து தகர்க்கும் மூலிகை டீ


மூலிகை டீ

சாதாரண டீ செய்து குடிப்பதற்கு பதிலாக, தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பூண்டு

ஒரு கப் தண்ணீரில் 2-3 பூண்டு பற்களைப் போட்டு, அத்துடன் 1-1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், முகத்தில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேறி, மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை என சில நாட்கள் பின்பற்றி வர வேண்டும்.

யூகலிப்டஸ் ஆயில்

கைக்குட்டையில் 2-3 துணிகள் யூகலிப்டஸ் ஆயிலை ஊற்றி, அதனை சுவாசித்துக் கொண்டிருந்தால், மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வேண்டுமெனில் இந்த ஆயிலை தலையணையில் சிறிது தெளித்துக் கொள்வதும் நல்ல நிவாரணத்தைத் தரும்.

வெதுவெதுப்பான தண்ணீர்

வெதுவெதுப்பான நீரில் நனைத்து துணியை நன்கு பிழிந்து, முகத்தின் மேல் 10-15 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மூலிகை டீ

மிளகு

சிறிது மிளகுத் தூளை நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, அதனை மூக்கைச் சுற்றி தடவி, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அத்தருணத்தில் தும்மல் வரக்கூடும். இருப்பினும் இந்த செயலை தொடர்ந்து செய்து வந்தால், சளி வெளியேறி, மூக்கடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

வெந்தயம்

1 டம்ளர் தண்ணீரில் 1-2 டீஸ்பூன் வெந்தய பொடியை சேர்த்து கலந்து, கொதிக்க வைத்து, வடிகட்டி தினமும் 2-3 முறை குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

No comments:

Post a Comment