Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 11, 2021

வாக்குகளை எண்ணுவதற்கு அரசு ஊழியர்களுக்கு பயிற்சி

ஏப்ரல் 10 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஆறாம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அணைக்கட்டு கே.வி. குப்பம், குடியாத்தம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1 .783 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.

பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர்,அணைக்கட்டு ஆகிய இரண்டு தொகுதிகளும் வாக்கு என்னும் மையங்கள் பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் காட்பாடி தொகுதிக்கு காட்பாடி சட்டக்கல்லூரி குடியாத்தம் கே. வி. குப்பம்தொகுதிகளுக்கு குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையத்திலற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு ஸ்ட்ராங்கும் என்று அழைக்கப்படும் இருட்டு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வரிசை எண் படி பாதுகாப்பாக அடுக்கி அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.இந்த வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவ துடன் கூடிய 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இதில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 320 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் இரண்டாம் தேதி நடக்க உள்ளது. அதற்கான பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் 15ஆம் தேதி விஐடியில் முதல்கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. வேலூர் காட்பாடி, குடியாத்தம் ஆகிய மூன்று வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்ற உள்ளவர்களுக்கு பயிற்சி சியில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவுது : பதிவான வாக்குகள் எண்ணிக்கை வரும் இரண்டாம் தேதி நடக்க உள்ளது ஐந்து தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு சட்டப்பேரவை தொகுதி வாரியாக அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் என்ன படுகின்றது. 

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதுதொடர்பான பயிற்சி அரசு ஊழியர்களுக்கு வரும் 15ஆம் தேதி விஐடியில் நடக்க உள்ளது. வாக்கு என்னும் நாளின் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் வாக்கு எண்ணும் அறையில் 14 டேபிள் கொண்டு இருக்கும்.

வெவ்வேறு டேபிளுக்கு ஒரு மேற்பார்வையாளர், மைக்ரோ அப்சர்வர், உதவியாளர் என மூன்று பேர் பணியாற்றுவார்கள். ஒரு அறையின் தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி தேர்தல் அலுவலர்கள், இல்லாமல் மொத்தம் 55 பேர் தேர்தல் பணியில் இருப்பார்கள். அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அன்று விளக்கம் அளிக்கப்படும்.

குறிப்பாக இந்த முறை கோரணா பரவல் காரணமாக சமூக இடைவெளி விட்டு டேபிள் போடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப ஊழியர்களும் பணியில் இருப்பவர்களும் முதற்கட்ட பயிற்சி முடிந்து பின்னர் இரண்டாவது கட்ட பயிற்சியும் பின்னர் வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment