Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 8, 2021

மே 10ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வுகள்! அதிரடி உத்தரவு!!

வரும் திங்கள் கிழமை முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என பாரதியார் பல்கலை கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்புக்கு மட்டும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால் நோய் பரவல் வேகமெடுத்ததை அடுத்து +2 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

கல்லூரிகள் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாரதியார் பல்கலை கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், மே 10 முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை,முதுகலை படிப்புகளுக்கான அரியர் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று பாரதியார் பல்கலை கழகம் கூறியுள்ளது. முன்னதாக, கொரோனா முதல் அலை பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் பின்னர் திறக்கப்பட்டன.

ஆனால் கொரோனா 2 வது அலை வேகமாக பரவிய நிலையில் கல்லூரிகளை மூடி ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்த அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் பாரதியார் பல்கலை கழகம் செம்ஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment