Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 8, 2021

ரேஷன் கடைகளில் மே 10 முதல் ரூ.2000 நிவாரணம் : தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் கடைகளில் மே 10 முதல் ரூ.2000 கொரோனா நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்தவகையில் நேற்று அவரது அறிவிப்பில், கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில் மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களை போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் ,அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு , சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் வகையில் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றார்

இந்நிலையில் அரிசி குடும்ப அட்டைத் தாரர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் ரூ.2000 கொரோனா நிவாரணம் அளிக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 10 ஆம் தேதி முதல் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 10ம் தேதி முதல் டோக்கன் தரப்பட்டு தினமும் 200 பேருக்கு நிவாரண நிதி அளிக்கப்படும் என்றும் வீடு, வீடாக டோக்கன் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் டோக்கன் முறையாக தரப்படுகிறதா என கண்காணிக்க துணை தாசில்தார் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment