Friday, July 2, 2021

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும்..!!

சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் உயர் கல்வித்துறைச் செயலாளர், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.

இந்தக்கூட்டத்தில் மாணவர் சேர்க்கை, நேரடி வகுப்புகள் நடத்துவது, தேர்வுகள், நிர்வாக செயல்பாடுகள், காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும். 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

எம்.பில்., படிப்பைத் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களின் நியமனங்களை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என்று துணைவேந்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் உள்ள முறைகேடுகளை விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு ஒற்றை சாளர முறையில் நடத்தப்படும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News