JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளுக்கும் ஆன்லைனிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 27 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கும் ஆன்லைனிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் கடந்த ஆண்டுகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டன.
இவற்றில் 14 கல்லூரிகளில் ஏற்கனவே அரசால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வரும் நிலையில், எஞ்சிய 27 கலை, அறிவியல் கல்லூரிகளிலும் அரசே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் தெரிவித்துள்ளார். 27 கல்லூரிகளிலும் அரசின் பிற கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படுவது போன்றே, ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், 27 கல்லூரிகளும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment