8ம் வகுப்பு தனித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, October 29, 2021

8ம் வகுப்பு தனித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

'எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுத விண்ணப்பித்தோருக்கு, இன்று ஹால் டிக்கெட் வெளியிடப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு வரும், 8ம் தேதி முதல் நடக்க உள்ளது. 

இந்த தேர்வை எழுத விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

தேர்வர்கள் இன்று பிற்பகல் 2:00 மணி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். 

ஹால் டிக்கெட் இன்றி தேர்வு மையம் வருவோர், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad