Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 2, 2022

"1 முதல் 12-ம் வகுப்பு" மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!!!!

தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் வழக்கமாக பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கப்படும். இந்நிலையில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பொதுத்தேர்வுகள் தாமதமாக தொடங்கியுள்ளது. அதாவது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 31-ஆம் தேதி வரையிலும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28-ம் தேதி வரையிலும் பொதுத் தேர்வுகள் நடைபெறும்.

இதனையடுத்து 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் மே 13-ம் தேதி வரையிலும், 1 முதல் 5 -ம் வகுப்பு மாணவர்களுக்கு 13-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தாமதமாக தொடங்கப்பட்டதால் அனைத்து வகுப்புகளும் ஜூன் 13-ம் தேதி தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24-ம் தேதி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். மேலும் இந்த வருடம் கோடை கால விடுமுறையின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment