JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நேற்று வெளியான வீடியோ ஒன்றில், அரசு பள்ளி வகுப்பறையில், மாணவியரின் முன், மாணவர்கள் தங்கள் வீரத்தை காட்ட, இரும்பாலான இருக்கை மற்றும் மேஜைகளை, துண்டு, துண்டாக உடைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம், வேலுார் மாவட்டம் தொரப்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்ததாக கூறப்படுகிறது.அரசு பள்ளிகள், பெருமையின் அடையாளம் என்று கூறும், தமிழக கல்வித் துறையின் வரலாற்றில், கடந்த ஓராண்டுகளாக நடக்கும் சம்பவங்கள் போல வரலாற்றிலேயே நடந்தது இல்லை என்கின்றனர் ஆசிரியர்கள்.
வேலூர்,தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி +2 மாணவர்கள் வகுப்பில் உள்ள மேசையை உடைத்த சம்பவத்தில் 10 மாணவர்களை மே 4ம் தேதி வரை இடைநீக்கம் செய்து ஆட்சியர் நடவடிக்கை. மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடக்கூடாது, மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தல்.
No comments:
Post a Comment