Search This Blog

Sunday, April 24, 2022

ஆசிரியர்கள் - மதிப்பிழந்த இரண்டாம் பெற்றோர்.

0 comments
பள்ளிக்கு வராதவனை வீடு தேடிச்சென்று அழையுங்கள், ஆனால் படிக்க சொல்லி எழுத சொல்லி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள், ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..

உங்களை ஆபாசமாக பேசினாலும், ஆபாசமாக வீடியோ எடுத்தாலும் அவர்களை திருத்தப்பாருங்கள் அவசரப்பட்டு ஏசிவிடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..

மதுவருந்திவிட்டு வகுப்பிற்குள் வந்தால் அனுசரித்துக்கொள்ளுங்கள் அவசரப்பட்டு வகுப்பிற்கு வெளியே அனுப்பிவிடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..

உங்களை கம்பு & கற்கலால் அடித்தாலும், ஏன் கத்தியால் குத்தினாலும் அவர்களை திருத்தப்பாருங்கள் அவசரப்பட்டு புகார் ஏதும் கொடுத்து விடாதீர்கள் ஏனெனில் நீங்கள் இரண்டாம் பெற்றோர்..

இத்தனையும் கடந்து நீங்கள் 100% தேர்ச்சி வழங்க வேண்டும். இல்லையேல் தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை ஒப்பிட்டு தரக்குறைவாக பொதுமேடையில் ஆட்சியாளர்களே

உங்களை குற்றம் சாட்டுவோம் ஏனெனில் நீங்கள் தண்ட சம்பளம் வாங்கும் இரண்டாம் பெற்றோர்..

ஆம் நீங்கள் மதிப்பிழந்த இரண்டாம் பெற்றோர்...

No comments:

Post a Comment