Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 17, 2022

10, பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளிகளில் வெளியீடு..! தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு..!


10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிகளில் வெளியிட வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வரும் 20ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு அதே தேதியில் பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை





என்ற இணையதளங்களில் மாணவர்கள் சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் வெளியிட வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment