துறை தேர்வு உத்தேச விடை குறிப்பு வெளியீடு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, June 29, 2022

துறை தேர்வு உத்தேச விடை குறிப்பு வெளியீடு

அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வின் உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு ஊழியர்களுக்கு, 151 துறை தேர்வுகள் இந்த மாதம், 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்டன. அதில், 122 தேர்வுகளின் உத்தேச விடை குறிப்புகள், www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றின் மீது ஆட்சேபனைகள் இருந்தால், உரிய ஆதாரங்களுடன், இன்று முதல் வரும் 5ம் தேதிக்குள், contacttnpsc@gmail.com என்ற இ- - மெயில் முகவரிக்கு மனுக்கள் அனுப்பலாம். கடிதம் வழியே ஆட்சேபனை தெரிவித்தால், ஏற்றுக் கொள்ளப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad