Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 2, 2022

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பச்சைக்கொடி காட்டியது பள்ளிக் கல்வித்துறை..!

தமிழகத்தில், பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 5-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி முடிவடைந்தது.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி முடிவடைந்தது.

அதன் தொடர்ச்சியாக, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கியது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி வருகிற 9-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் ஆசிரியர்கள் கடுமை காட்டக்கூடாது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம், தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தாராளமாக மதிப்பெண்கள் வழங்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பச்சைக்கொடி காட்டியுள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17-ம் தேதியும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதியும்,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23-ம் தேதியும் வெளியாகவுள்ளது.

No comments:

Post a Comment