டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு' ஆசிரியர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, August 9, 2022

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு' ஆசிரியர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 2021-22-ம் கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக 386 ஆசிரியர்களை எவ்வாறுதேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் குழுவுக்கு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதற்காக மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழுவும், மாநில அளவில் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்கவேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் மாவட்ட தேர்வுக் குழுவின்முன் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பீடு செய்யவேண்டும்.

மேலும், மாவட்ட தேர்வுக்குழுவின் தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை, மாநில தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு வருகிற 14-ந்தேதிக்குள் அனுப்பவேண்டும். அந்த பட்டியலின் அடிப்படையில் மாநில தேர்வுக்குழு இறுதி பட்டியலை தயாரிக்கவேண்டும்.

அனைத்துவகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கவேண்டும் எனவும், வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும் என்றும், அலுவலகங்களில்நிர்வாகப்பணி மேற்கொள்ளும்ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எந்தவித குற்றச்சாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், பொதுவாழ்வில் தூய்மையானவராகவும், பொதுசேவைகளில் நாட்டம் கொண்டவராகவும், தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், கல்வித்தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்.

மேலும், அரசியலில் பங்குபெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாக பரிந்துரைக்கக்கூடாது என்றும், கல்வியை வணிகரீதியாக கருதி செயல்படும் ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இந்த விருதுக்கு தகுதியற்றவர்களாக கருதப் படவேண்டும் என்பது போன்ற பல்வேறு வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வழங்கி யுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad