Thamizhkadal WhatsApp Channel

பெண்கள் குழந்தைகள் சிறுவயதிலேயே பூப்பெய்துதலை தடுக்க இந்த வகை உணவுகளை கொடுங்கள் .!!

நம் பாரம்பரியம் சுட்டிக்காட்டிய ஆரோக்கிய உணவு வகைகளில் இந்த முளைக்கட்டிய பயறுகளும் ஒன்று. காலை நேரத்தில் ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும் என்று நீங்க விரும்பினாலோ, மாலையில் நல்ல ஸ்நாக்ஸ் சாப்பிடவேண்டும் என்று நினைத்தாலோ உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த முளைக்கட்டிய பயறுகள்.

ஏனென்றால், சாதாரண பயறுகளைவிட முளைக்கட்டிய பயறுகளில் ஊட்டச்சத்துக்கள் ஏராளம். அதுமட்டுமல்லாமல், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை விட இவற்றில் ஒமேகா அமிலம், தயாமின், வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கே புரோட்டீன்கள், நியாசின், அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

முளைக்கட்டிய பயறுகளின் நன்மைகள்:

இயற்கை உணவான தானியங்களை முளைக்கட்டி சாப்பிடுவதால், செரிமானப்பிரச்சனையை ஏற்படுத்தும் பைரேட்ஸ் என்ற குறைப்படுகிறது. இதனால், எளிதில் செரிமானம் நடக்கும்.

உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைக்கின்ற எல்லோருக்கும் சிறந்த உணவு இதுவாகும். முளைகட்டிய பயறுகளில் கலோரி குறைவு என்பதுடன், அவை பசியையும் கட்டுக்குள் வைக்கும்.

முளைக்கட்டிய பயறுகளில் பொட்டாசியம் அதிகளவில் இருக்கிறது. இது இரத்த விருத்திக்கும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இரத்தசோகை நோயையும் தடுக்கிறது.

கண்களுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. ஏனென்றால், இதில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. இது பார்வைத் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

முளைக்கட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்தி, உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. மேலும், இதில் வைட்டமின் பி சத்து மென்மையான சருமத்தை தருகிறது. சருமம் புத்துணர்வு பெறவும் உதவுகிறது.

தினமும் முளைக்கட்டிய பயறுகளை சாப்பிடுவதால், முடி வளர்ச்சி மேம்படும். ஏனென்றால், இதில் ஒமேகா அமிலம் அதிகம் இருக்கிறது. இதில் இருக்கும் ஆண்டிஆக்சிடண்ட்ஸ் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை கொடுக்கின்றன. அதுமட்டுமல்லாமல், பெண்கள் சிறுவயதிலேயே பூப்பெய்துதலையும் தடுக்கிறது.

முளைக்கட்டிய பயறு வகைகள்:

முளைக்கட்டிய கொள்ளு: உடல் சூட்டைத் தணிப்பதுடன் தொப்பை யைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்கிறது.

முளைக்கட்டிய கம்பு: உடலுக்கு பலம் கூட்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர உடல் உறுதியாகும்.

முளைக்கட்டிய பச்சைப்பயறு: சருமப் பளபளப்புக்கு உதவுகிறது. மறதி நோயை கட்டுபடுத்துகிறது. வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கும்.

முளைக்கட்டிய வெந்தயம்: சர்க்கரையின் அளவு அதிகம் உள்ள சர்க்கரை நோயாளிகள், தினமும் இதை ஒரு கப் சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு கட்டுப்படும். பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள், வெள்ளைப்படுதலை குணப்படுத்தும்.

முளைக்கட்டிய வேர்க்கடலை, எள்: அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இதை எடுத்துக்கொள்வது ரொம்ப நல்லது. உடல் மெலிந்து போய் இருப்பவர்கள் தினமும் 100 கிராம் அளவு முளைக்கட்டிய எள், வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால், உடல் எடை கூடும்.

குறிப்பு:

எக்காரணத்திற்காகவும் முளைக்கட்டிய பயறுகளை வேகவைத்தும், எண்ணெயில் பொரித்தும் சாப்பிடக் கூடாது. பச்சையாக சாப்பிட பிடிக்கவில்லை என்றால், சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம் சுவை தித்திப்பாக இருக்கும்.

முளைகட்டிய பயறைச் சாப்பிட்ட பிறகு, உடலுக்கு வேலை கொடுக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், ஜீரணம் ஆக அதிக நேரம் எடுக்கும்.

முடிந்தவரை வயது முதிர்ந்தவர்கள் இவற்றை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories