பிரட் பாஸந்தி

தேவையானவை:

பால் - 1½ லிட்டர்,
பிரெட் - 5 துண்டுகள் (ஓரம் நீக்கியது),
சர்க்கரை பொடித்தது - 1 கப்,
டூட்டி ஃப்ரூட்டி - அலங்கரிக்க.

செய்முறை:

அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும். அவ்வாறு கொதிக்கும் ேபாது அதன் மேலே ஆடை படியும். அதை எடுத்து தனியே வைக்கவும். பிரட்டை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பால் பாதியளவு சுண்டிய பிறகு அதில் பொடித்த பிரட் துகல்கள் மற்றும் சர்க்கரையை சேர்த்து கிளறவும். கெட்டிப்பதம் வந்தவுடன் எடுத்து வைத்த பால் ஏடுகளை சேர்த்து கிளறி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவும். தேவைப்பட்டால் டூட்டி ஃப்ரூட்டி அல்லது பாதாமை சீவி சேர்க்கவும்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel