Thamizhkadal WhatsApp Channel

மூங்தால் அல்வா


தேவையானவை:

பாசிப்பருப்பு - 1 கப்,
காய்ச்சி ஆற வைத்த பால் - 1 கப்,
சர்க்கரை - 1¼ கப்,
நெய் - ¼ கப்,
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை,
ஏலத்தூள் - 1 டீஸ்பூன்,
பொடித்த முந்திரி,
குங்குமப்பூ சிறிது.

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் பாசிப்பருப்பை நீர் விட்டு 5 மணி நேரம் ஊறவைத்து, நன்றாக கழுவவும். பிறகு அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அரைத்த பாசிப்பருப்பு விழுதை நெய் சேர்த்து, சிறிய தணலில் வைத்து கிளறி பொன்னிறமானதும் பால், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் நன்றாக கிளறி இறக்கவும். இதில் ஏலத்தூள் போட்டு கிளறி, முந்திரிப் பருப்பு, குங்குமப்பூவை தூவி பரிமாறவும். சூப்பர் சுவையுடன் மணமாக இருக்கும்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories