Wednesday, November 30, 2022

10 லட்சம் வேலைவாய்ப்புகள்: எந்தெந்த துறையில் எவ்வளவு காலியிடங்கள் தெரியுமா?

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 12.6 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது ஜனவரி-மார்ச் காலாண்டில் 9.3 சதவீதமாக இருந்தது. இருப்பினும், கரோனா நோய்த்தொற்று முதல் அலையின் போது காணப்பட்ட 20.8 சதவீதத்தில் இருந்து இது குறைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்ட சமீபத்திய காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு காட்டியிருந்தது.

இந்த நிலையில், அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள வேலைவாய்ப்பு நிலையை ஆய்வு செய்த பின்னர் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேரை “மிஷன் முறையில்” பணியமர்த்த பிரதமர் நரேந்திர மோடி தனது அரசுக்கு அறிவுறுத்தினார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடி அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளத்தின் நிலையை மதிப்பாய்வு செய்து, அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேரை பணி முறையில் பணியமர்த்துவதற்கு அரசுக்கு அறிவுறுத்தினார், என பதிவிட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் திட்டத்தை பிரதமா் மோடி காணொலி முறையில் தொடக்கி வைத்தாா். முதல்கட்டமாக, நாடு முழுவதும் 75,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

பின்னர், பிரதமர் பேசுகையில், இளைஞா்களின் திறன் மேம்பாட்டுக்காக, விவசாயம், குறு, சிறு, நடுத்தர தொழில் உள்ளிட்ட துறைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. ‘திறன் இந்தியா’ திட்டத்தின்கீழ் 1.25 கோடிக்கும் அதிகமானோருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

ட்ரோன் கொள்கையைத் தாராளமயமாக்குதல், விண்வெளிக் கொள்கையில் தனியாருக்கு இடமளிப்பது, முத்ரா திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் போன்ற அரசின் முயற்சிகள், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு உத்வேகமளித்துள்ளன.

நாட்டில் முதல் முறையாக காதி மற்றும் கிராமத் தொழில்களின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. காதி மற்றும் கிராமத் தொழில்களில் 4 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

‘புத்தாக்க இந்தியா’ (ஸ்டாா்ட்அப் இந்தியா) திட்டம், நமது இளைஞா்களின் திறனை வெளிக்கொணா்ந்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 7 கோடி போ் பலனடைந்து வருகின்றனா்.

இந்த 21-ஆம் நூற்றாண்டில், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ மற்றும் ‘தற்சாா்பு இந்தியா’ ஆகிய இரண்டும் தேசத்தின் மிகப் பெரிய லட்சிய திட்டங்களாகும். இத்திட்டங்களின் வாயிலாக, பல துறைகளில் இறக்குமதியாளா் என்பதில் இருந்து ஏற்றுமதியாளா் அந்தஸ்தை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது.

உற்பத்தி, சுற்றுலாத் துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால், இவ்விரு துறைகளிலும் மத்திய அரசால் விரிவான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய ஆதாரமாக உள்கட்டமைப்புத் துறை விளங்குகிறது. எனவே, புதிய சாலைகள், துறைமுகங்கள், ரயில்வே தண்டவாளங்கள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 3.5 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. உள்கட்டமைப்புத் துறையில் ரூ.100 லட்சம் கோடி செலவிடுவதே இந்தியாவின் இலக்கு என்று தெரிவித்தார்.

செலவினத் துறையின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2020 மாா்ச் 1 வரையில் மத்திய அரசுப் பணியாளா்கள் எண்ணிக்கை 31.91 லட்சமாகும். மொத்தம் அனுமதிக்கப்பட்ட ஊழியா்கள் எண்ணிக்கை 40.78 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் திட்டத்தின் படி மீதம் உள்ள பணியிடங்களுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டில் நாட்டில் உள்ள 38 அமைச்சகத்தின் கீழ் கிரேடு ஏ, பி, சி பணியிடங்களுக்கு தனித்தனியாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு 18 முதல் 40க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பு வெளியாகும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

எந்தெந்த துறையில் எவ்வளவு காலியிடங்கள் என்று பார்ப்போம்

* Defence(Civilian) 2,64,706
* Railway - 2,93,943
* Postal Department - 90,050
* Revenue - 80,243
* Indian Audit and Accounts - 25,934
* Atomic Energy - 9460
​* Science and Technology - 8543
​* Water Resources, River Development and Ganga Rejuvenation - 6,860
​* Agriculture, Co-operation and Farmer - 2210
​* Commerce - 2585
​* Environment, Forest and Climate Change - 2302
​* Information and Broadcasting - 2041
​* Personnel, Public Public Grievances and pensions - 2535
​* Fisheries, Animal Husbandry and Dairying - 1842
​* Labour and Employment - 2408
​* Statistics and Programme Implementation - 2156
​* Housing and Urban Affairs - 2751
​* Health And Family Welfare - 1769
​* Corporate Affairs - 1220
​* Electronics and Information Technology - 1568
​* ​Shipping and Waterways - 1043
​* Agricultural Research And Education - 13
​* Ayush - 118
​* Bio-Technology - 83
​* Cabinet Secretariat - 54
​* Chemicals and Petrochemicals - 72
​* Civil Aviation - 917
​* Coal - 170
​* Consumer Affairs - 541
​* Culture - 3788
​* Development of NE Region - 110
​* Drinking Water and Sanitation - 49
​* Empowerment of persons with Disabilities - 62
​* Earth Sciences - 3043
​* Economic Affiars - 306
​* Expenditure - 464
​* Fertilizers - 60
​* Financial Services - 339
​* Food And Public Distribution - 405
​* Food Processing Industries - 53
​* Health Research - 17
​* Heavy Industries - 96
​​* Higher Education - 313
​* Youth Affairs and Sports 115 Post
​* Promotion of Industry and Internal Trade - 462
​* Investment and Public Asset Management - 14
​* Land Resources - 57
​* Law and Justice - 937
​* Micro, Small and Medium Enterprises - 71
​* Mines - 7063
​* Minority Affairs - 121
​* New and Renewable Energy - 92
​* Panchayat raj - 56
​* Parliament Affairs - 29
​* Petroleum and Natural Gas - 122
​* Pharmaceuticals - 36
​* Planning(Niti Ayog) - 233
​* Power Department - 790
​* President's Secretariat - 91
​* Prime Ministers Office - 129
​* Public Enterprises - 41
​* Road Transport and Highway - 287
​* Rural Development - 157
​* School Education and Literacy - 163
​* Scientific and Industrial Research - 46
​* Skill Development and Entrepreneurship - 698
​* Social Justice and Empowerment - 269
​* Space - 2106
​* Steel - 57
​* Telecommunication - 167
​* Textile - 501
​* Tourism - 144
​* Tribal Affairs - 147
​* Union Public Service Commission - 657
​* Vice Presidents Secretariat - 268
​* Woman and Child Development - 353
​* Youth Affairs and Sports - 115

மேற்கண்ட துறைகளின் காலியிடங்கள் முழுவதும் மத்திய அரசினால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் மட்டுமே நிரப்பப்பட உள்ளன.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application