JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 13,404 பணியிடங்களுக்கு, டிச.26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 காலிப் பணியிடங்கள் உள்ளன. அதன்படி, 239 முதல்வர் காலிப்பணியிடங்கள், 203 துணை முதல்வர் காலிப் பணியிடங்கள், 1409 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள், 3176 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள், 355 நூலகர் காலிப் பணியிடங்கள் உள்ளிட்டவை உள்ளன.
வயது வரம்பு: விண்ணப்பதாரரின் வயது வரம்பைப் பொருத்தவரை முதுநிலை ஆசிரியர்களுக்கு 40, பட்டதாரி ஆசிரியர்களுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் வயது தளர்வளிக்கப்படும். முதுநிலை ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலையும், இளநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு இளநிலை பட்டம் மற்றும் அதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் கணினி பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூ.47600 முதல் ரூ.1,51,100, இளநிலை ஆசிரியர்களுக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
இணையவழியில் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். விருப்பமும் தகுதியும் உடையோர் டிச.26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://kvsangathan.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் வயது தளர்வு அளிக்கப்படும்
No comments:
Post a Comment