JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

குறைதீர் கற்றல் பயிற்சிக்கு ஒவ்வொரு குறுவளமையத்திற்கும் நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும்.
இவர்களுக்கு வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் 15.12.22 அன்று பயிற்சி அளிக்க வேண்டும். அதன் பின் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி 17.12.22 அன்று குறுவளமைய அளவில் பயிற்சி சிறப்பாக நடத்தப்பட வேண்டும் . குறுவளமைய பயிற்சியின் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் இருவேளை தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படவேண்டும்.
ஒரு பயிற்சியாளர் மற்றும் பயிற்றுநருக்கு நாள் ஒன்றுக்கு ரூ .130 / இதற்காக செலவு செய்ய வேண்டும். தன்னார்வலர் அனைவருக்கும் பயணப்படி அவரவர் வங்கிகணக்கிற்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் . பயிற்சிக்கான தண்ணீர் , TLM போன்ற இதர செலவினங்களையும் பயிற்சி தலைப்பின் கீழ் மேற்கொள்ள வேண்டும் .
எனவே பயிற்சிக்காக ஒரு தன்னார்வலர் விதம் ரூ .200 வரை செலவு மேற்கொள்ள வேண்டும் என இல்லம் தேடிக் கல்வி திட்ட சிறப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment