JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 ஐ வரவு வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.பொங்கல் பண்டிகைக்காக கடந்த ஆட்சியில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் ரூபாயும் வழங்கினர்.
வரும் பொங்கலை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.1000 செலுத்த தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளது.குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரி கூறியதாவது:
நாளை ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கூட்டம் நடத்தி, பரிசு தொகை வழங்குவதற்கான விபரங்களை சேகரிப்பது குறித்த விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.வங்கி கணக்கு வைத்திருப்போர் கணக்கு புத்தக முதல் மற்றும் 2 ம் பக்கம், ஆதார், ரேஷன் கார்டு நகல்களை டிச., 10 க்குள் ரேஷன் கடை விற்பனையாளரிடம் வழங்க வேண்டும்.
வங்கி கணக்கு இல்லாதவர்கள் ஆதார், ரேஷன் கார்டு ஜெராக்ஸ், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை ரேஷன் கடைகளில் வழங்கினால் 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு துவக்கி, பரிசு தொகை வரவு வைக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment