Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 20, 2023

எல்ஐசி குழுமத்தில் 300 காலியிடங்கள்: பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு

நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டுக் கழகமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் 300 உதவி நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer) பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்புக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள்: 300

கல்வித் தகுதி: பி.ஏ/ பி.எஸ்சி /பிகாம் போன்ற இளநிலைப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01/01/2023 அன்று 21 முதல் 30 வருடங்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர் 02/01/1993 தேதிக்கு முன்பு அல்லது 01/01/2002 தேதிக்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

தெரிவு முறை: தெரிவு முறை மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வில் (Preliminary Examination) தகுதி பெற்ற தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்கு (Main Examination)அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

அடிப்படை சம்பளம்: ரூ, 53,600

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள், அணைத்து பிரிவுகளையும் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பம் செய்வது எப்படி? 31-01-2023 அன்றைக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பபம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இணைய தள முகவரி licindia.in ஆகும். முகப்பு பக்கத்தில், (ஆட்தேர்வு (careers) > Recruitment of AAO(Generalist) 2023 என்ற இணைப்பு வழியே) விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment