Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 23, 2023

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை மாரடைப்பு வரக்கூடும்!



ஒரு மாதத்திற்குள் மாரடைப்பு வரப்போகிறது என்பதனை வெளிக்காட்டும் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் இருப்பவர்களுக்கும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனை சரியான நேரத்தில் சரி செய்து கொள்ளாமல் விடுவதன் காரணமாக நம் உடலின் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும்.

எனவே மாரடைப்பு வருவதனை ஒரு மாதத்திற்கு முன்பாகவே தெரிந்து கொள்ளலாம். நம் உடலில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களை வைத்து இதனை அறிந்து கொள்ளலாம் அதனை பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

மாரடைப்பு வரப்போகிறது என்பதனை வெளிப்படுத்தும் முதல் அறிகுறி அதிகளவு மயக்கம் தொடர்ந்து நாள் முழுவதும் வேலைகளை செய்து வருவதன் காரணமாக மயக்கம் ஏற்படும் ஆனால் எவ்வித வேலைகளையும் செய்யவில்லை என்றாலும் அதிகளவு மயக்கம் ஏற்பட்டால் மாரடைப்பு வருவதற்கான அறிகுறி ஆகும்.

நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அடிக்கடி விழிப்பு ஏற்படுவது. மற்றும் தூக்கமின்மை இவ்வாறு பிரச்சனைகள் ஏற்படுவது மாரடைப்பின் அறிகுறிகள் ஆகும்.

சராசரி மூச்சடைப்பின் அளவை விட மிக அதிகமான மூச்சடைப்பு ஏற்படும் இவை நம் இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் அளவு குறைவதன் காரணமாக மூச்சடைப்பு ஏற்படுகிறது. இவை மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் ஆகும்.

மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் எவ்வித உணவுகள் எடுத்துக் கொண்டாலும் அவை செரிமானம் ஆகாமல் விடுவது மற்றும் அஜீரண கோளாறு அதிகப்படியான வயிற்றுப் பிரச்சனை ஆகியவை மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும்.

எப்போதும் இல்லாத அளவைவிட திடீரென பதட்டம் அடைவது அவ்வாறு ஏற்பட்டால் மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் ஆகும். எனவே இவ்வித அறிவுரைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லதாகும்.

No comments:

Post a Comment