Wednesday, February 8, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.02.2023

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

பொருள்:
நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை

பழமொழி :

Beauty without modesty is infamous.

பணிவில்லாத அழகு பாராட்டுப் பெறாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன் 

பொன்மொழி :

பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவர் எல்லாவற்றையும் சாதிக்கலாம்.

பொது அறிவு :

1. சென்னையின் முதல் பெண் மேயர் யார் ? 

தாரா செரியன்.

 2. முதல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கலம் எது? 

ஆரியபட்டா.

English words & meanings :

A proud ant - arrogant

ஆரோக்ய வாழ்வு :

தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

NMMS Q

சர்வேஷ் புகைப்படத்தில் உள்ள நபரை காண்பித்து, " இவள் என் தந்தையின் மனைவியின் ஒரே மகனின் மகள்" எனக் கூறினார் எனில் சர்வேஷிற்கு புகைப்படத்தில் உள்ளவர் என்ன உறவு? 

விடை: மகள்

பிப்ரவரி 08


சாகிர் உசேன் அவர்களின் பிறந்த நாள்




சாகிர் உசேன் (Zakir Hussain, 8 பெப்ரவரி 1897 - 3 மே 1969)  இந்தியாவின் 
மூன்றாவது  குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.

கல்வித் துறையில் இவர் ஆற்றிய அருந்தொண்டினைப் பாராட்டி ,இந்திய அரசு இவருக்கு 1954 ல் பத்ம விபூஷண் எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது. 1963-ல் நாட்டின் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.

நீதிக்கதை

அதிர்ஷ்டக்கதவு எப்போது திறக்கும்?

தன் கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவருக்கு வெயிலால் நாக்கு வரண்டது. வழியில் ஒரு கிணற்றில் இளைஞன். ஒருவன் கிணற்றில் தண்ணீர் இரைத்து பாத்தியிலுள்ள செடிகளுக்கு பாய்ச்சிக் கொண்டிருந்தான். முதியவர் அவனிடம் தண்ணீர் வாங்கி குடித்தார்.

தாகம் தீர்த்த மகிழ்ச்சியில் முதியவர் தம்பி, எங்கும் வறட்சி நிலவுகிறதே, ஆனால் உன் தோட்டத்து கிணற்றில் மட்டும் தண்ணீர் நன்றாக ஊறுகிறது. அதிர்ஷ்டம் உன் பக்கம் இருப்பதால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது என்றார். ஐயா, உழைப்பின் தன்மையை அதிர்ஷ்டம் என்று சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள். 

அத்தனையும் என் உழைப்பு. அவ்வப்போது என் கிணற்றை தூர்வாரி பராமரிப்பு செய்ததால் இந்த வறட்சியிலும் என் கிணறு வற்றவில்லை. விடாமுயற்சியுடன் பாடுபட்டதால் தான் இந்த கட்டாந்தரை கூட பூஞ்சோலையாக மாறியிருக்கிறது. உழைப்பு என்னும் விலை கொடுத்தால் மட்டுமே அதிர்ஷ்டக்கதவு திறக்கும் என்றான். முதியவரும் இளைஞனை தட்டிக்கொடுத்து புறப்பட்டார்.
[07/02, 6:06 pm] Ammu: தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

இன்றைய செய்திகள்

08.02.2023

* கரோனா பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு, வயது வரம்பினைத் தளர்த்தும் ஒருமுறை நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

* நோய்களை துல்லியமாக கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: அப்போலோ மருத்துவமனையில் அறிமுகம்.

* வசதிகள் இல்லை என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பணியாற்ற மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

* இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல்திறன் தகுதித் தேர்வு தொடக்கம்: தமிழகம் முழுவதும் பிப்ரவரி 11 வரை நடக்கிறது.

* தொற்று நோய்களை எதிர்த்துப் போராட எஸ்சிஓ அமைப்பு நாடுகளுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு.

* இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகு ரக போர் விமானமான தேஜஸ் சோதனை அடிப்படையில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

* துருக்கி, சிரியா நிலநடுக்கம்:  3 நாட்களுக்கு முன்பே கணித்து எச்சரித்த டச்சு ஆராய்ச்சியாளர்.

* பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியா உதவி வருவது பாராட்டுக்குரியது என்றும், உண்மையான நண்பனைப் போல் இந்தியா உதவுகிறது என்றும் இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிராட் சுனெல் தெரிவித்துள்ளார்.

* தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது: அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் 24 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

* இந்தியா-நேபாள பெண்கள் அணிகள் மோதும் சர்வதேச கால்பந்து போட்டி: சென்னையில் 15, 18-ந் தேதிகளில் நடக்கிறது.

Today's Headlines

* Chief Minister M.K.Stalin has written to Prime Minister Narendra Modi urging him to take a one-time measure of relaxing the age limit for the candidates who were unable to write the civil service exams during the Corona pandemic period.

 * Artificial Intelligence Technology for Accurate Diagnosis of Diseases: Introduced at Apollo Hospitals.

* Doctors cannot refuse to work in primary health centers citing lack of facilities: HC orders.

 * Physical Fitness Eligibility Test for Constable Second Level Start: All over Tamil Nadu will be held till February 11.

 * Union Minister calls on SCO countries to fight infectious diseases.

 * Tejas, the Indian Navy's light combat aircraft, successfully landed for the first time aboard INS Vikrant on a trial basis.

 * Turkey, Syria earthquake: Dutch researcher who predicted and warned 3 days in advance.

 *Turkey's ambassador to India Frat Sunel said that India's assistance to earthquake-affected Turkey is commendable and that India is helping like a true friend.

 *Sports competitions for Chief Minister's Cup have started across Tamil Nadu: Competitions will be held till the 24th for everyone to participate.

* India-Nepal women's international football match: It will be held in Chennai on the 15th and 18th.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application