Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 17, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.02.2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அடக்கம் உடைமை

குறள் : 127
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

பொருள்:
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்

பழமொழி :

constant change is a sign of progress.
தொடர்ந்த மாற்றம், முன்னேற்றத்திற்கான அறிகுறி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.

 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

ஒழுக்கம் போர்க்களம் போன்றது. நாம் ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால், ஓயாமல் மனதோடு போராட வேண்டும்.

பொது அறிவு :

1. இந்திய பெட்ரோலிய கழகம் எங்கு அமைந்துள்ளது?

 டேராடூனில். 

2. எண் கணிதத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட முதல் கருவி எது? 

அபாகஸ்.English words & meanings :

large ant -Elephant

ஆரோக்ய வாழ்வு :

வாஸ்லின், எலுமிச்சை: வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கூட்ட வாஸ்லின் உதவும். புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக எலுமிச்சை சாறு உதவும். இரவில் வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பாதங்களில் தடவி, உடற்சூடு வெளியேறாமல் தடுக்க கம்பளியால் ஆன காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விடவும்.
கற்றாழை: இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவவும். தொடர்ந்து 4-5 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.

NMMS Q

வேருக்கு பாதுகாப்பு அளிக்கும் பூஞ்சை ___________

விடை: ட்ரைகோடெர்மா

நீதிக்கதை

ஜோடிக் காக்கை

ஓர் ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான், அவன் ஒருநாள் தூங்கி எழுந்ததும் விடியற்காலையில் ஜோடியாக உள்ள காக்கைகளைக் கண்டால் அன்றைக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கேள்விப்பட்டு அறிந்தான். தான் ஜோடிக் காக்கைகளைக் காலையில் எழுந்ததும் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டான்.

அவ்வாறு எண்ணம் கொண்ட அப்பணக்காரன் தன் வேலைக்காரனை அழைத்து நீ விடியற்காலையில் ஜோடி காக்கைகளைப் பார்த்து வந்து என்னை எழுப்பு என்று கூறினான். அவ்வேலைக்காரன் மறுநாள் விடியற்காலையில் ஓர் இடத்தில் ஜோடிக் காக்கைகள் இருப்பதைப் பார்த்தான், உடனே ஓடிச் சென்று தன் எஜமானை எழுப்பினான்.

அப்பணக்காரன் படுக்கையிலிருந்து எழுந்து சென்று பார்க்கும் பொழுது அங்கே ஒரு காக்கை மட்டுமே இருந்தது. ஒரு காக்கையை மட்டும் பார்த்த பணக்காரன் கோபம் கொண்டு மற்றொரு காக்கை பறந்து செல்வதற்கு முன்னால் என்னை வந்து ஏன் எழுப்பவில்லை என்று சொல்லிக் கொண்டே வேலைக்காரனை அடித்தான். அப்போது அந்த வேலைக்காரன் எஜமானனே விடியற்காலையில் ஜோடிக் காக்கைகளைப் பார்த்தால் எனக்கு உண்டான அதிர்ஷ்டத்தைப் பார்த்தீர்களா? உங்களிடம் அடி வாங்கியதுதான் அதிர்ஷ்டம் என்று கூறினான். அதைக் கேட்ட பணக்காரன் ஆமாம் என்று சொல்லி அடிப்பதை நிறுத்திவிட்டான்.

இன்றைய செய்திகள்

17.02.2023

* ஆன்லைன் சேவைகள் முழுமையாக சீர் செய்யப்பட்டதாக தமிழக மின் வாரியம் தகவல்.

* விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை எல்லையோர மாவட்டங்களில் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

* வெளிநாடுகளில் படித்து இந்தியா திரும்பும் மருத்துவர்களுக்கான தகுதித் தேர்வில் சென்னை லிம்ரா மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 86 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

* பள்ளி மாணவர்கள் வடிவமைத்த 150 செயற்கை கோள் பிப்ரவரி 19-ல் விண்ணில் ஏவப்படும்.

* மகாராஷ்டிரா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள லத்தூரில் பூமிக்கு அடியில் மர்மமான ஒலிகள் கேட்டுள்ளன. ஆனால் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

* பெங்களூரு எலகங்கா விமானப் படைத் தளத்தில் நடைபெறும் சர்வதேச விமான கண்காட்சியில் ரஷ்யா சார்பில் 200 வகையான ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

* இலங்கையில் ஓர் ஆண்டுக்குப் பிறகு தடையற்ற மின்சார விநியோகம் இன்று தொடங்குவதாக, அந்நாட்டு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

* பிலிப்பைன்ஸில் இன்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

* பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆலோசகராக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடிகள் வெற்றி.

* சென்னையில் நடைபெற்ற இந்தியா-நேபாளம் அணிகளுக்கு இடையிலான சர்வதேச பெண்கள் நட்புறவு கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது.

Today's Headlines

* Tamil Nadu Electricity Board informs that online services have been fully repaired.

* The Secretary of the Health Department told the Southern Regional National Green Tribunal that the Tamil Nadu government is considering arresting those who illegally dump medical waste in the border districts under the Gangster Act.

*  86 percent of the trainees at LIMRA Center in Chennai set a record in the qualifying examination for doctors returning to India after studying abroad.

 * 150 satellites designed by school students will be launched on February 19.

 * Mysterious sounds have been heard underground in Latur in the eastern part of Maharashtra state.  But no earthquake was reported, officials said.

 * 200 types of weapons are on display on behalf of Russia at the International Air Show held at Bengaluru's Elkanga Air Force Base.

 * Sri Lanka's electricity board has announced that uninterrupted power supply will begin today after a year.

* A magnitude 6.1 earthquake struck the Philippines today.  People were scared because of this.

 * Renowned tennis player Sania Mirza has been appointed as the consultant for Royal Challengers Bangalore for the Women's Premier League 20 Over cricket tournament.

 * Chennai Open Challenger Tennis: Indian pairs won the doubles.

 * The women's international friendly football match between India and Nepal in Chennai ended in a draw.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment