நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்: நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை வாழ்க்கை முறை சார்ந்த நோய்களாகும்.
கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இவற்றின் அறிகுறிகள் முன்கூட்டியே தெரிவதில்லை. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அமைதியான கொலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றன. அனைத்து நோய்களையும் போலவே சர்க்கரை நோய்க்கும் சில அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த அறிகுறிகள் மிகவும் சாதாரணமாக இருந்தாலும், இவற்றை பற்றிய புரிதல் கொண்டு இவற்றை சரியான நேரத்தில் அடையாளம் காண வேண்டியது மிக அவசியம். நீரிழிவு நோயின் சில முக்கிய அறிகுறிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றின் மீது சிறிது கவனம் செலுத்தினால், பல பெரிய அபாயங்களை நாம் தவிர்க்கலாம்.
வாய் வறண்டு போனால் கவனம் செலுத்துங்கள்
பொதுவாக அனைவரும் காலையில் மிகவும் புத்துணர்ச்சியுடன் எழுவார்கள். ஆனால், இதில் ஏதேனும் மாறுபாடு தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காலையில் வாய் வறண்டு இருந்து, இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்தால், அதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இருப்பினும், வறண்ட வாய்க்கு வேறு காரணங்களும் இருக்கலாம்.சர்க்கரை நோயைஉறுதிப்படுத்த பரிசோதனை அவசியம்.
குமட்டல் உணர்வு
இதுவும் சர்க்கரை நோய் இருப்பதற்கான சாத்தியமான அறிகுறியாகும். காலையில் வாந்தி எடுப்பது போல் உணர்ந்தால் அது சர்க்கரை நோயாக இருக்கலாம். பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி சங்கட பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இது நீரிழிவு நோயாளிக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் பிரச்சனையாகவும் இருக்கலாம்.
மங்கலான பார்வை
காலையில் கண்களைத் திறக்கும்போது தெளிவாகத் தெரியவில்லை என்றால், அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பு காரணமாக, கண்களின் லென்ஸின் அளவு சற்று பெரியதாக இருக்கலாம். இது தெளிவின்மையை உருவாக்கும்.
கண்களில் வீக்கம்
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் நபர்களுக்கு திரவம் கண்களில் இருந்து வெளியேறுகிறது. இது கண்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
No comments:
Post a Comment