Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 12, 2023

தைராய்டு: இரவில் சாப்பிட வேண்டிய உணவுகள்

Add This Number In Your Whatsapp Groups -6379884356
தைராய்டு சுரப்பிகளை நிர்வகிப்பதில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டு சுரப்பி என்பது கழுத்தின் முன்புறத்தில் உள்ள சிறிய பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும்.

இது உடலில் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை ஆதரிக்கும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.சில நேரங்களில், இந்த சுரப்பி செயலிழந்து அதிக அல்லது மிகக் குறைந்த ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இதை ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. 

அயோடின் போன்ற சில ஊட்டச்சத்துக்களின் குறைபாடு தைராய்டு செயலிழப்புக்கான காரணங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமான தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பராமரிக்க ஒரு சீரான உணவை உட்கொள்வது முக்கியமாகும்.அயோடினைத் தவிர, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைப் பாதிக்கும் பல காரணிகள் உள்ளன.

தைராய்டு நோயைக் கட்டுப்படுத்த, பழங்கள் மற்றும் காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.இதை தவிர்த்து உலர் பழங்களில் தைராய்டு செயல்பாட்டிற்கு உதவும் செலினியம் உள்ளது. இவற்றைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டாலும் தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டை அதிகரிக்க முடியும்.முந்திரிப் பருப்பு முந்திரிப் பருப்பில் செலினியம் என்ற தாதுச்சத்து அதிகம் உள்ளது. 

இது தைராய்டு செயல்பாட்டை உறுதி செய்வதிலும், தைராய்டு அளவை ஒழுங்குபடுத்துவதிலும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக தைராய்டு திசுக்களைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 4-5 முந்திரிப் பருப்பை ஊற வைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்லது.தேங்காய் தேங்காயில் அதிகளவு நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

இது வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. தினமும் தேங்காய் துண்டுகளைச் இரவில் சாப்பிட்டு வந்தால் தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வறுத்த பூசணி விதை பூசணி விதைகளில் அதிகளவு துத்தநாக சத்து உள்ளது. இது தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

மேலும், பூசணி விதைகளில் உள்ள டிரிப்டோபானின், தூக்கத்தை ஊக்குவிக்கும் அமீனோ அமிலமாகும். வறுத்த பூசணி விதைகளை தினமும் உட்கொண்டு வந்தால் ஆழ்ந்த உறக்கத்தை அளித்து தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. 

வறுத்த பூசணி விதைகளை இரவில் சாப்பிட்டு வருவது நல்லது.சியா விதைகள் சியா விதைகளில் ஒமேகா -3 அதிகம் உள்ளது. பொதுவாக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. 

இவை தைராய்டு சுரப்பி தொடர்பான நிலைமைகளான ஹாஷிமோட்டோவின் தைராய்டிடிஸ், டிகுவெர்வின் தைராய்டிடிஸ் அல்லது தைராய்டின் பிற வீக்கத்தை குறைக்கும். இதனால் சிறிதளவு சியா விதைகளைத் தினமும் ஊறவைத்து இரவில் சாப்பிடுவது நல்லது.

No comments:

Post a Comment

Popular Feed