JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் 20-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தட்கல் உள்பட) ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது.

இதையடுத்து தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர 10-ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் மார்ச் 20 முதல் 24- ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது.
தனித்தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். தங்களுக்குரிய தேர்வு தேதி விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment