Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 7, 2023

தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற வேண்டும் - பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை

Add This Number In Your Whatsapp Groups -6379884356
12 ஆண்டுகளாக வறுமைப் பிடியிலும், இருளில் வாழ்ந்து வரும் 12,200 பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பங்களில் வாழ்வாதார முன்னேற்றமும் திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி 181- ஐ நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக பகுதி நேர ஆசிரியர்கள் கூறுகையில், தேர்தல் அறிக்கை 181யில் தமிழக முதலமைச்சர் எங்களுக்கு பணி நிரந்திர செய்யோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார். அதன் இதுவரைக்கும் அதற்கு எந்த முன்னேற்பாடுகளும் எதும் செய்யவில்லை. அமைச்சர்கள் எங்கு சென்றாலும் நாங்கள் ஓடி ஓடி மனுக்களை கொடுத்து வருகிறோம். படிப்படியாக செய்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் எங்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை.

எங்களது ஒரே கோரிக்கைதான் பணி நிரந்தர ஆணையை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டுமென்ற ஒரே முடிவோடு அனைத்து மாவட்டத்திலும் இருக்கக்கூடிய பகுதி நேர ஆசிரியர்கள் இங்கு வந்துள்ளோம். முதலமைச்சரை சந்திப்பதற்கு முயற்சிகள் எடுத்தாலும் இதுவரை எங்களை பார்ப்பதற்கு அவர் அனுமதி கொடுக்கவில்லை பணி நிறைந்த ஆணையை கொடுக்கும் வரை காலவரையின்றி போராட்டம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed