Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 31, 2023

விரைவில் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

பாடநூல் கழகம் மறு சீரமைப்பு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலுரை அளித்தார். அப்போது; 25 மாவட்டங்களில் உள்ள மாதிரிப்பள்ளிகள் 250 கோடியில் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்படும். ரூ.175 கோடியில் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

ரூ.9 கோடியில் 2 விளையாட்டு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும். பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை விட்டால் சமுதாயத்துக்கு ஐந்துநாள் இழப்பு. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த அரசு, ஆசிரியர்களை ஒரு போதும் கைவிடாது. நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டில் ரூ. 68.47 கோடி பெறப்பட்டுள்ளது. நடப்பாண்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். பள்ளிகள் புணரமைக்கப்பட்டு வருகிறது. 6 ஆயிரம் வகுப்பறைகள் புதிதாக கட்டப்பட உள்ளது.

10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 6 முதல் 8ம் வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று என 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்படும். ரூ.175 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் 2996 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்படும். ரூ.150 கோடியில் 7500 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும். மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ரூ.10 கோடியில் மாபெரும் வாசிப்பு இயக்கம் அரசுப் பள்ளிகளில் நூலகச் செயல்பாடுகள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரூ.9 கோடியில் விளையாட்டு சிறப்பு பள்ளிகள் அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் இரண்டு விளையாட்டு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும். வேலை வாய்ப்புத் தேடி தமிழ்நாட்டிற்கு வரும் பிற மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களின் தாய் மொழியுடன் தமிழில் பேசவும், எழுதவும் ஏதுவாக தொடங்கப்படும். ரூ.8 கோடியில் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் அரசுப் பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுத்திட உபகரணங்கள் வழங்கப்படும்.

ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் சிறைச்சாலைகளில் முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 1249 சிறைவாசிகளுக்கு செயல்படுத்தப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; ஆடுற மாட்ட ஆடிக்கறந்து, பாடுற மாட்ட பாடிக்கறந்து, அரசின் திட்டம் எனும் பாலினை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பதே ஸ்டாலினிசம் என கூறினார்.

No comments:

Post a Comment