
அத்திப்பழம் அல்லது அஞ்சீர் என அழைக்கப்படும் சிறிய வகை பழமானது அனைவராலும் விரும்பி உட்கொள்ளப்படும் பழ வகைகளில் ஒன்று.
பெரும்பாலும் இந்திய துணை கண்டம் மற்றும் மேற்கு ஆசியாவில் அதிகம் விளையும் இந்த பழமானது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களால் விரும்பி உட்கொள்ளபடுகிறது. அதிக அளவு நார்ச்சத்து, ஜிங்க், மக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.
மேலும் அடிக்கடி நொறுக்கு தீனிகளை உட்கொள்ள விரும்பும் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு தேர்வாகவும் இது அமையும். இவற்றில் கலோரிகள் மிக குறைவாக இருப்பதால் உடல் எடை குறைப்பிற்கும், குறைவான கலோரிகள் கொண்ட உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கும் இது அதிகம் உதவுகிறது. இவற்றைத் தவிர அத்திப்பழத்தை உட்கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மேலும் நமது செரிமான ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது. அத்திப்பழம் உட்கொள்வதால் நமக்கு கிடைக்கும் முக்கியமான நான்கு நன்மைகளை பற்றி பார்ப்போம்:
சர்க்கரை அளவை குறைக்கிறது: ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் அத்திப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் உணவு செரிமானம் ஆகும் நேரத்தை இது அதிகரிக்கிறது. இதன் காரணமாக அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மிக மெதுவாக உடலினால் கிரகிக்கப்படுகிறது. எனவே உடனடியாக ரத்தத்தின் சர்க்கரை அளவானது அதிகரிக்கும் ஆபத்து தவிர்க்கப்படுகிறது. ஆனால் காய்ந்த அத்திப்பழங்களில் அதிக அளவு சர்க்கரை நிறைந்துள்ளதால் அவற்றை மிகச் சிறிதளவே உட்கொள்ள வேண்டும்.
இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது: இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடென்ட் ரத்தத்தில் உள்ள ட்ரைக்ளிசரைடை குறைப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். இதைத் தவிர ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் இது அதிகம் குறைக்கிறது. ஆன்ட்டிஆக்சிடென்ட் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மேலும் ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை போக்குவதற்கும் இதய கோளாறுகளால் வரும் ஆபத்தை குறைக்கவும் உதவுகிறது.
செரிமானத்தை மண்டலத்தை உருவாக்குகிறது: அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்தானது நமது உடலின் செரிமான மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருபவர்களுக்கும் அத்திப்பழம் ஒரு சிறந்த தீர்வாக விளங்குகிறது. மேலும் வயிற்றில் உள்ள நன்மை அளிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தி செரிமானத்தை வலுவாக்க உதவுகிறது.
எலும்புகள் மற்றும் தசைகள் வலு சேர்க்கிறது: அவ்வப்போது அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம் நமது எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடைகிறது. இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நமது எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
No comments:
Post a Comment