JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), 'தடயவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பதவியில் காலியாக 31 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
இதற்காக மே 26ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு ஜூலை 23ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு (முதுநிலை பட்டப்படிப்பு தரம்), பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை2ம் தாள் தேர்வும் நடக்கிறது. அதாவது கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு(10ம் வகுப்பு தரம்), பொது அறிவு(பட்டப்படிப்பு தரம்) நடைபெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எம்.எஸ்.சி., (போரன்சிக் சயின்ஸ்) படித்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment