Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 13, 2023

இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் சிறுநீரகம் செயலிழப்பு தான்!! சர்க்கரை நோயாளிகளே அலார்ட்!!





நீரிழிவு நோய் என்பது இரண்டு வகைப்படும். வகை 1 நீரிழிவு நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய். இதில் நீரிழிவு நெஃப்ராபதி என்பது நிர்வகிக்கப்படாத வகை 1 நீரிழிவு நோய். அது மட்டுமில்லாமல் வகை 2 நீரிழிவு நோயால் ஏற்படும் ஒரு ஆபத்தான நிலையாகும். இதை நீரிழிவு சிறுநீரக நோய் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த சிறுநீரக நீரிழிவு நோய் சிறுநீரக செயல்பாட்டின் திறனை பாதிக்கின்றது. அதாவது உடலில் இருந்து கூடுதலான கழிவு பொருட்களையும் திரவத்தையும் எடுத்துச் செல்லும் செயல்பாட்டை தடுக்கிறது.

இந்த நிலைமை தீவிரமாக மாறும்போது சிறுநீரகங்களின் வடிகட்டுதல் செயல்முறையில் பாதிப்பு ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் அதிக சர்க்கரை அளவு சிறுநீரகங்களை பாதிக்கின்றது.

சரியான நேரத்தில் இந்த நோயை கண்டறிந்தால் நோய் தீவிரம் அடைவதையும் ஆபத்தான சிக்கல்களையும் தடுக்கலாம். இந்த சிறுநீரக நோய் சிறுநீரக செயல்பாட்டையும் பாதிக்கும். மேலும் சிறுநீரக செயலிலப்பு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இது மேலும் தீவிரமடைந்தால் சிறுநீரகத்தை மாற்ற வேண்டிய நிலை வரும்.

சிறுநீரக நீரிழிவு நோயின் அறிகுறிகள்

நீரிழிவு சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம். கைகள் கால்கள், கணுக்கால்கள், கண்களில் வீக்கம், அடிக்கடி சிறுநீர் வருதல், மனநிலை மாற்றம், கவனம் செலுத்த முடியாமல் இருப்பது, சுவாசப் பிரச்சனைகள், வாந்தி, குமட்டல், அரிப்பு, சோர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இந்த சிறுநீரக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 20 முதல் 30 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருக்கின்றது. ஆகவே இரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனையை அடிக்கடி செய்து பார்க்க வேண்டும். இதனால் நோயினை விரைவாக கண்டறிய முடியும்.

அதிக ஆபத்தில் உள்ளவர்கள் யார் யார்?

இந்த சிறுநீரக நீரிழிவு நோய் யாருக்கெல்லாம் வரும் என்றால் நீரிழிவு நோய் உள்ளவர்கள், சரியான உணவுப் பழக்கங்களை பின்பற்றாதவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள், புகைப் பழக்கம் உள்ளவர்கள், சோடியம் நிறைந்த உணவுகளை உண்பவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அதிகம் கொலஸ்டரால் உள்ளவர்கள், சிறுநீரக கோளாறு உள்ள குடும்ப வரலாற்றை கொண்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள்.

சிறுநீரக நீரிழிவு நோயிக்கான சிகிச்சை முறை

சிறுநீரக நீரிழிவு நோயிக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டும். அடிக்கடி உயர் ரத்த அழுத்தத்தை பார்க்கவும். அடிக்கடி எடைப் பருமனை பராமரிக்க வேண்டும். உடற்பயிற்சியை மேற்கெள்ள வேண்டும். உப்பு உள்ள உணவுகளை எடுக்க வேண்டாம். புகைபிடித்தல் மது அருந்துதல் போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும்.

மன அழுத்தம் இல்லாமல் இருக்க யோகா தியானம் செய்ய வேண்டும். சிறுநீரக நோயினை ஏற்படுத்தும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய்கள் உள்ளவர்கள் சிறுநீரக நோய்க்கான பரிசோதனையை செய்து பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment