JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அரசு பள்ளி ஆசிரியர்கள் 1,000 பேருக்கு, தொல்லியல் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், தமிழின் தொன்மை, அதன் சிறப்புகள் போன்றவற்றை கற்பிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தொல்லியல் துறை வாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோடை விடுமுறையின்போது, ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா, ஆறு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவை, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய, 11 மண்டலங்களில், 1,000 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளதாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.
உண்டு, உறைவிட வசதியுடன் பயிற்சி பெறும் ஆசிரியர்கள், புதிய கல்வி ஆண்டில் இருந்து, மாணவர்களுக்கு தொல்லியல் தொடர்பான பாடங்களை நடத்த உள்ளனர்.
Hi Guys,
ReplyDeleteWe Are Provide Gpl Plugins And Themes Very Cheap Price. Download AMP PageBuilder.