Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 11, 2023

இன்று முதல் +2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்... மே 17 கடைசி தேதி... முழு விபரம்!

ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சியடையாதவர்கள், இன்று மே 11 முதல் மே 17ம் தேதி வரை துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://dge.tn.gov.in இணையதளத்தை அணுகலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தங்களது மதிப்பெண்களை மறு ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். 

விடைத்தாள் நகல்களை பெறுவதற்கான கட்டணம் ரூ.275 எனவும் 

மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305 எனவும், பிற பாடங்களுக்கு ரூ.205 என்ற வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த மேலும் விபரங்களுக்கு மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் அல்லது தாங்கள் பயின்ற பள்ளிகளில் விசாரித்து அறிந்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க மே 13ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment