Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 30, 2023

உடல் எடை குறைய, அடர்த்தியான முடி, பொலிவான சருமம் பெற இது போதும்!!


உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு பல மனப் பிரச்சனைகள் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

எப்படியாவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இதற்காக பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. ஆரோக்கியமான முறைகளில் அதிகரித்துள்ள உடல் எடையை குறைக்கலாம். பல ஆரோக்கிய உணவுகள் இருந்தாலும் இன்றைக்கு உடல் எடையை குறைப்பில் முக்கிய பங்காற்றும் நெல்லிக்காயின் அற்புதங்கள் குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

தினமும் நெல்லிக்காயை தண்ணீர் குடித்து வந்தால், அது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக உணவு செரிமானம் சிறப்பாக இருக்கும் மற்றும் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

1. மலை நெல்லிக்காய்
2. கருவேப்பிலை.
3. எலுமிச்சை பழம்

செய்முறை:

நான்கு முதல் ஐந்து மலை நெல்லிக்காயை விதை நீக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு கொத்து கறிவேப்பிலை சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் ஒரு வெற்றிசாரில் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். நீர் சேர்த்து ஒரு டம்ளர் அளவு எடுத்து இது நம்பர் அரை எலுமிச்சை பழம் சாற்றை சேர்த்து தேவையானால் உப்பு சேர்த்து குடித்து வருகையில் உடல் எடை வெகு விரைவில் குறைவதை காண்பீர்கள்.

எடை இழப்பு மற்றும் கொழுப்பை குறைக்கவும், கொழுப்பை எரிக்கவும் குறைவான கலோரிகளை எடுத்துகொள்ள வேண்டும். அல்லது அதிக கலோரிகளை எரிக்கவும் வேண்டும். நெல்லிக்காய் இந்த இரண்டையும் சரியாக செய்யும். அதனால் உடல் எடை குறைப்பில் நெல்லிக்காய் உதவக்கூடும்.

எடை குறைக்க நினைப்பவர்களுக்கு முதல் வழி உடல் பருமனிலிருந்து குறைய டீடாக்ஸ் சிறந்த வழியாக இருக்கும். நார்ச்சத்து உள்ளடக்கம் நிறைந்த நெல்லிக்காய் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி செரிமானத்தை ஒழுங்குப்படுத்துகிறது. மேலும் குடலின் இயக்கங்களை சரியாக செய்கிறது. மலச்சிக்கலை எதிர்த்து போராடுகிறது.

No comments:

Post a Comment