Sunday, May 28, 2023

தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2023-2024ஆம் கல்வி ஆண்டிற்கான இரண்டாண்டு தொடக்கக் கல்விப் பட்டயப் பயிற்சி மாணவர் (Diploma in Elementary Education (D.El.Ed.) course) சேர்க்கை நடைபெறவிருக்கிறது.

இந்த படிப்புக்கு தகுதி பெற, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பொது பிரிவினர் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். SC/ST/BC/MBC பிரிவினர் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களை scert.tnschools.gov.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

நியூட்ரிஷன், சைக்காலஜி படிப்புகளில் கவனம் செலுத்தும் மாணவர்கள்.. இத்தனை வேலை வாய்ப்புகளா?

மாணவ/மாணவியர்கள் இணையதளம் (Online) மூலம் 05.06.2023 முதல் 15.06.2023 வரை விண்ணப்பிக்கலாம். அவ்வாறு, செய்ய இயலாத நிலையில் விண்ணப்பதாரர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News