JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
From OSD sir..
இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறை!
மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விருப்பத்திற்கு இணங்க இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
கோடை விடுமுறை காலத்தில் விருப்பப்படும் குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்கள் மையங்களுக்கு வருகை புரிந்து படிக்கலாம்.
பொது நூலகங்களில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும் மாணவர்களின் தனித்திறனை வளர்க்கவும் இந்த விடுமுறையைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்கள் அருகில் உள்ள பொது நூலகங்களில் நடைபெறுகின்றன. அங்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். நூலகங்களில் குழந்தைகளை உறுப்பினர்களாக சேர்த்து நூலகங்களிலிருந்து நூல்களை எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஊக்கப்படுத்துங்கள்.
இக்கோடை விடுமுறை காலத்தில் தன்னார்வலர்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! மாணவர் சேர்க்கை குறித்த பதிவை இல்லம் தேடிக் கல்வி மொபைல் செயலியில் தவறாது பதிவு செய்யவும். அதிக குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் தன்னார்வலர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்!
No comments:
Post a Comment