THAMIZHKADAL STUDY MATERIALS

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Thursday, June 15, 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.06.2023

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 194

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

விளக்கம்:

பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

பழமொழி :

Penury pinches all.

பசிவந்தால் பத்தும் பறந்து போகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2.  என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. நெல்சன் மண்டேலா

பொது அறிவு :

1. சூரியனைச் சுற்றி வருவதற்கு அதிக நேரம் எடுக்கும் கிரகம் எது?

நெப்டியூன்


2. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் என்ன?

150 மில்லியன் கிலோமீட்டர்கள் (93 மில்லியன் மைல்கள்)

English words & meanings :

 Donate - give money to charity or poor people, 

deposit - a sum of money people put in their bank account

ஆரோக்ய வாழ்வு :

அசைவ உணவை இரவில் தவிர்ப்பது உடல் செரிமானத்திற்கு நல்லது.தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை உட்கொள்ள வேண்டும்.

ஜூன் 15


உலகக் காற்று நாள் (World Wind Dayஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும்உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது.இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.

நீதிக்கதை

அவன் சரியான வால் பையன். பள்ளியில் எப்போதும் சேட்டைகள்தாம். அன்று அவனுக்கு பயமாக இருந்தது. காரணம், ஆசிரியைகளுடன் பெற்றோர் சந்தித்துப் பேசும் தினம் அது. பள்ளிக்கு வரும் அம்மாவிடம் 'மிஸ்' புகார் சொல்லி விட்டால்... பயந்து கொண்டே இருந்தான்.

எல்லா பெற்றோரும் ஆசிரியையுடன் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இவனது தாயாரின் முறை வந்தது.

"பள்ளியில் பையன் எப்படி?" என்று கேட்டாள் தாய்.

"அவனுக்கென்ன சமத்துப் பையன்" என்று மாணவனைப் பார்த்தவாறே சொன்னார் ஆசிரியை.

பையனுக்கு ஆச்சர்யம். தாய்க்கும் ஆச்சரியம்.

“அப்படியா? அவன் ரொம்ப வால் ஆச்சே, நிறைய குறும்பு பண்ணுவானே" என்று விடாமல் கேட்டாள் தாய்.

"அதெல்லாம் சின்னப் பசங்க பண்றதுதானே. மத்தபடி ரொம்ப நல்ல பையன்" என்று, மீண்டும் சொன்னார் ஆசிரியை.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாணவனின் நடவடிக்கைகள் மாறிவிட்டன. தன்னைப் பற்றி நல்லவிதமாக சொன்ன ஆசிரியையிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்றே தன்னுடைய 'வால்' தனத்தைக் குறைத்துக் கொண்டான். •

இன்றைய செய்திகள்

15.06. 2023

* பிபோர்ஜாய் புயல் - குஜராத் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம்.

*பிபோர்ஜாய் புயலை கருத்தில் கொண்டு 63 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

*பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் புத்தாக்க நிறுவனங்களின் கண்காட்சியில் 70 இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு.

*கேரளத்தில் தொடங்கியுள்ள தென்மேற்குப் பருவமழை ஜூன் 18 ல் இருந்து கிழக்கு இந்திய பகுதிக்கு பரவும் என அறிவிப்பு.

*தூத்துக்குடியைச் சேர்ந்த ஹர்சன் என்ற சிறுவன் தொடர்ந்து 7.30 மணி நேரம் நீரில் மிதந்து உலக சாதனை படைத்தான்.

Today's Headlines

* Piborjoy Cyclone - Gujarat State Government Intensifies Precautionary Measures

 *63 trains have been canceled due to  Cyclone Piborjoy.

 *70 Indian companies will participate in the exhibition of innovative companies in Paris, the capital of France.

 * It is Announced that the Southwest Monsoon which has started in Kerala will spread to East India from June 18.

 *A boy named Harsan from Thoothukudi set a world record by floating continuously for 7.30 hours


 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment